குழந்தை ஓன்று பிறந்தது அதுவோ பெண்ணாக இருந்தது! வான் நின்ற தேவதைகளும் வாய் பிளந்து நின்ற பேரழகு தான் என்னவோ! சிரிக்கும் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சிகள் தான் உன் இதழ்களோ! கண் சிமிட்டும் உன்னழகில் கண் இமைக்கவும் மறந்தேனே! மெல்லுடலை தாங்கும் போதேல்லாம் மயிர்கால் களெல்லாம் சிலிர்ப்பதென்னவோ! கையில் ஏந்தி கன்னத்தில் முத்தமிட பிறவியின் பயன் இதுவென்றே தோன்றியது! உலகின் மொத்த அப்பாவி தனமும் கண்ணே நீ தூங்கினால் காட்டுகிறதே! பசியினால் ஓர்நொடி அழுதாலும் பதறுதே என்மனம் தாங்காதம்மா! பெண் குழந்தைகள் பெற்றால் செலவு ! ஆயினும் அவர்கள் தேவதைகளின் வரவு ! மண்ணுலகில் சொர்க்கம் ஒன்றுண்டு எனில் அதுபெண் குழந்தைகள் மகிழும் இல்லம்தானது! ஆயிரம் தெய்வங்களின் மொத்த உருவம்தான் பெண் குழந்தை அதற்கு அதன் தந்தையே சாட்சி!