Skip to main content

Posts

Showing posts from September, 2017

அன்னையின் அமுது

கண் விழிக்கும் காலை பொழுதினிலே! மண் மணக்கும் வாசம் காற்றினிலே! தாவி பிடிக்கும் முழு நிலவெல்லாம்! ஆவி பறக்கும் இட்லி குண்டாவிலே ! பருப்பினை கடைந்து பல்சுவை கூட்டி! பலகாய் கறிகள்இட்டு பதமுடன் சேர்த்து! நறுமண மல்லியும் நலம்தரும் கறிவேப்பிலையும்! காரமும் சாரமும் பலவகை மசாலாவும்! எண்ணையில் பொறிந்திட கடுகது கவிபாட! கடைந்து கடைந்து நாளும் சேர்த்த அமிர்தமும் தோற்றுப்போகும் நீ சமைத்த சாம்பாருக்குமுன்! அரிசியுடன் உளுந்தும் அன்புடன் கலந்து! ஆட்டு கல்லில் அழகுடன் அரைத்து! புளித்தால் பொங்கும் சுவைக்க ஏங்கும்! கல்லில் எண்ணெய் சீராக சுற்றி ! வட்ட வட்டமாக ஊற்றிட விரியும்! பிட்டு தின்றால் நாவினில் கரையும் ! நாளும் ஆசை நீசுடும் தோசை! மணம் கமழும் மல்லி சட்னி ! மதி மயங்கும் தக்காளி சட்னி! தேன் சொரியும் தேங்காய் சட்னி! வகை வகையாக வாரி கொள்ளணுமே! பலநூறு ஆயிரம் செலவழித்து பலகடைகள் தேடி உண்டாலும் அன்னை படைக்கும் அமுதுக்கு ஈடு இணை இல்லையே! அமுதூட்டும் அன்னை கரங்களில் ஆலயம்மேவும்  இறைவன் வாழ்கிறான்! 

சிவ பானம்

சிவ பானம் என்றால் கள்ளும், கஞ்சாவும், மதுவும் கருத்தில் கொள்வது தானே இன்றைய சூழ்நிலை . அவை மட்டும் போதை தரவில்லை இவ்வுலகில் . ஆணுக்கும் பெண் போதை பெண்ணுக்கு ஆண் போதை அன்பு ஒரு போதை அறிவு ஒரு போதை ஆற்றல் ஒரு போதை ஆண்மை ஒரு போதை ஆணவம் ஒரு போதை உண்மை ஒரு போதை உழைப்பு ஒரு போதை உயர்வு ஒரு போதை செல்வம் ஒரு போதை செழிப்பு ஒரு போதை பெண்மை ஒரு போதை பேரும் பெயரும் ஒரு போதை ஊன் ஒரு போதை உடல் ஒரு போதை - அதில் உற்ற இன்பம் ஒரு போதை அவரவர் வயதுக்கேற்ப ஏதாவது ஒரு விஷயம் போதை தருகிறது என்பது தான் உண்மை !!! பாதை மாறிய அனைவரும் போதைக்கு அடிமையானவர்களே!! சிவ பானம் ரகசியமதை கூறுவோம். மதுவை குடித்தால் தான் போதை மாதுவை பார்த்தால் தான் போதை - ஆனால் ஈசனை நினைத்தாலே போதை தான் கள்ளுண்ண வேண்டாம் தானே களிப்பு தரும் ஞானம் தர வல்லது இந்த பானம் தயாரிக்கும் முறைதனை கேள்….. "உடல் எனும் அடுப்பில் சுவாசம் எனும் துருத்தியால் மூலாதாரத்தில் நெருப்பை மூட்டு" "பார்வைதனை அண்ணாமலையில் இருத்தி, வாசிதனை உண்ணாமுலையில் செலுத்த, ஊசி முனையில் சிவபானம் கொட்டுதே! கா...

சிவ சொரூபம்:

சிவனுக்கு எக்கோயில்களிலும் உருவமில்லை காரணம் சாபம் என்பதில் ஞாயமில்லை உடலுக்கு உருவமுண்டு உயிருக்கு ஏதடா?? அண்டத்தில் எத்தனை உயிர்கள் - உண்டோ அத்தனையும் சிவ சொரூபமே சிறிதோ, பெரிதோ, ஒரு நாளோ, பல நூறு வருடமோ என எல்லாம் சிவ சொரூபமே. கோயில்களில் சிவனை சுயம்பு லிங்கமாக காண்பிப்பதற்கு அர்த்தம் உண்டு. அந்த சிவன் (ஜீவன்) தானாகவே தோன்றியதால் தான் சுயம்பு ஆகிறான். தானாக தோன்றியது எதுவோ, அது தானாகவே தான் அழியும். தோன்றியவனும்(பிறப்பு) அவனே அழித்தவனும்(இறப்பு) அவனே! ஈன்றெடுத்த தாயாகினும் உயிரை பெற்றாளே அன்றி படைக்கவில்லை. வளர்த்தெடுத்த தந்தையாகினும் உயிரை வளர்த்தாரே அன்றி வார்க்கவில்லை. தானகேவே தான் தோன்றியதை குறிக்கும் அடையாளமே சிவலிங்கம். சிவலிங்கம் என்றால். ஆண், பெண் குறி சேர்ப்பு என்றோ மூளையின் ஒரு பகுதியின் சுரப்பி என்றோ எண்ணுபவர்கள் கோடி இவ்வுலகில். தன் உயிரை தானே தரிசித்த ஒரு ஆன்மீக விஞ்ஞானி உருவாக்கிய குறியீடு தான் அது. ஊருக்கு செல்ல பயன்படும் வரைபடம் தான் அது. வரைபடம் ஒரு நாளும் ஊர் ஆகாது. அங்கு உறைந்திருக்கும் ஈசன் ஆகாது நட்ட கல்லும் பேச...

பயணம்

தொடங்கியது ஓர் நன்னாளில், பயணசீட்டு கொடுத்தான் சிறுபுன்னகையுடன், அதன் அர்த்தமென்னவென்றால்  என்று தொடங்கியதோ அன்றே முடியும் நாள் குறிக்கபட்டது. இந்த பயணத்தில் நீ, ரசிக்கலாம் சிரிக்கலாம் அழலாம் கோபபடலாம் ஏக்கம் கொள்ளலாம் அன்பு காட்டலாம் அறிவை வளர்க்கலாம் பிறருக்கு உதவலாம் அல்லது உபத்திரம் பண்ணலாம் இங்குள்ள எந்த பொருளையும் பயன்படுத்தலாம், அழிக்கலாம் ஆக்கலாம் காக்கலாம் சேர்க்கலாம் பிரிக்கலாம் பயணம் முடியும் முன்பே கீழே குதித்துவிடலாம் பயண காட்சிகளை கொண்டாடலாம் குதுகலிக்கலாம் இல்லை கண் மூடி கொள்ளலாம். என்று பயணம் எத்தனை துரமோ அதுவரை எது வேண்டுமானாலும் செய்யலாம் அல்லது எதுவும் செய்யாமல் இருக்கலாம். தற்காலிகமாக கொடுக்கபட்ட இருக்கைகளை தனது என்றும், பிறர் இருக்கைகளை தனதாக்க துடிக்கும் பல பேர். பயணத்திற்காக உருவாக்கி கொடுக்கபட்ட வசதிகள் அனைவருக்கும் சமமாக பங்கிடபடாமல் வலியோர் தங்கள் தேவையை பெருக்கி எளியோறை சுரண்டும் அவலம் இங்குண்டு. இருக்கை வளங்களையெல்லாம் அழித்து வண்டிகாரனை பழிக்கும் ஒரு கூட்டம். உயர்ந்தோர், தாழ்ந்தோர், கருப்பு, சிவப்பு, ஜாதி, மதம், ...

அன்னையர் தினம்

ஐயிரண்டு திங்கள் நொந்து பெற்ற உன்னையே! மையிரண்டு விழிகளில் காத்து நின்றவள் அன்னையே! தங்கமுலை கொண்டு பால் கொடுத்து, அங்கமெலாம் சிலிர்க்க ஆனந்தம் கொண்டவளே! உண்ணும் போது என்றாவது அன்னையை நினைத்ததுண்டா, உன்னை மறந்து உண்ட ஓர் நாளும் அவளுக்கிங்கில்லையே!. அன்னையே உன்னை போற்றி, ஆயிரம் பாடலிருந்து பயனென்னவோ! உன் பெருமையை மறந்த கூட்டம், கோடி தான் இந்நாட்டிலே. உன்னை போற்றி கவி எழுத பாடல் ஏதும் இல்லையே! நின்னை கைவிட்ட கூட்டம் தனை சாடும் நேரம் வந்ததே! உற்ற சொந்த உறவெலாம், கற்ற கல்வி உயர்வெலாம், பெற்ற குழந்தை பேரெலாம், மண்ணுக்கு நீ வந்த பின்னலோ!. இவ்வுலகம் வந்து சேரும் முன்னே, உற்ற உறவு உனக்கு தாயல்லோ!. மனைவி மக்கள் கூட வாழ தாயை பாரமென நினைக்கும் பாவிகாள் உன்னை பாரமென நினைத்திருந்தால் தன் உடல் நோவ உனை சுமந்திருப்பாளோ!... வேரை அறுத்துவிட்டு கிளைகளுக்கு நீர் இறைத்து என் பயன்!! பால்பட்ட மரத்தை வெட்ட நினைக்கும் மூடரே!... பால் கொடுத்து தன்னை இழந்தவள் தாயல்லோ! அன்னை ஒன்று இங்கிருக்க மறந்துவிட்டு ஆலயம் சென்று பயன் என்ன? ஆங்கே அன்னதானம், தர்ம வேள்வி செய்வதனால்...

அன்னையர் எழுவர் அகவல்

வாழ வைக்கும் அன்னையே - என் வீடு தேடி ஓடிவா! கால மெலாம் என்னையே - உன் கண் மணியில் காத்துவா! வீடு வாசல் செல்வமெலாம் - என்றும் செழித்து வாழ வரங்கள்தா! செல்வம் பதினாறும் அருளும் - என் செல்வமே வராகி வா! போக வாழ்வு இன்பம்தரும் - என் பூங்கொடியே பிராமி வா! கேட்ட தெலாம் அள்ளிதரும் - என் கோமளமே வைஷ்ணவி வா! செய்தொழில் யாவும் வெற்றிதரும் - என் செந்தேனே இந்திரானி வா! தவமும் தானமும் நித்தம்தழைக்க - என் தங்கமே மாகேஷ்வரி வா! வித்தைகள் யாவும் சித்திக்கும் - என் வித்தகியே கௌமாரி வா! ஆனந்த அமுது ஊட்டும் - என் அம்மையே சாமுண்டி வா! அன்னை உங்கள் திருவடியை - நாளும் தொழுதால் நன்மை கோடியே!... -- jithu

மனதை பாதித்த புகைப்படம்,

இறைவனை தொழுவதற்கு அழைத்தால், அவன் எனக்கு எதுவும் தரவில்லை நான் ஏன் தொழ வேண்டும் என கூறிய மானிடர்களுக்கு மத்தியில், நான் இறைவனை வணங்குவதை கண்டால், அவனை தொழுதாலும், அழைத்தாலும் உன் வாழ்வு மாறாது, உன் இழி நிலையும் போகாது என ஏளனம் செய்த கூட்டத்தின் இடையில், இறைவா உன்னை தொழாமல் இருக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் உன்னை நித்தம் தொழ நான் கொண்ட காரணமிதுவே, "என்னை படைத்தவன் நீயே" உன்னை தொழுது யாதொரு பலனும் பெறாது இவர்களால் இழிவு படுத்தபடலாம். ஆனால் உன்னை தொழுது நான் பெற்ற பலன் 'நின் கருணையே" யாதொரு செல்வமின்றி கடைவாழ்வு வாழலாம், நீ எனக்கு தந்த முதல் செல்வமே "இந்த ஜீவன் தான்" அது உள்ளவரை உன்னையே தொழுவேன். பிறிதொரு காரண வேண்டாமே!. என்று யாதொரு வார்த்தையும் சொல்லாமல் புரிய வைத்தாயப்பா!. -- jithu

இறைவா யார் நீ

இரை தேடும் உயிர்களில் இறையே உனைதேடும் உயிர்நானே! கரை புரண்டோடும் வெள்ளமாய் தரை மீதினில் ஓடினேன் - உனைதேடியே ஊர் பல உருவம் பல உலகம் பல - உனை பற்றி கூறும் வகையினில் குழம்பினேன். மண் பொன் சிலைகளிலுண்டோ? விண் மண் பூதங்களிலுண்டோ? - நீ மனங்கள் எத்தனையோ? மதங்கள் அத்தனையே! ஒவ்வொன்றும் ஓர் விதத்தில் உனை கூற முயன்றனவே! எங்குமாகி நின்றோய் நீ யாதொன்றும் அறியேன் நான் மலை மேல் ஏறி தேடினேன் பாத யாத்திரை ஊராக ஓடினேன் கண் இருந்தும் காணாது வாடினேன் உண்மை உணரா மக்களில் கூடினேன் எட்டும் இரண்டும் அறியேன் நின்பதம் கனவிலும் நினையேன் வாசிதனில் ஏறும்வகை அறியேன் மனமடங்கும் உபாயமதை புரியேன்! கடிமலர் தொடுத்து பாதத்தில் சூடினேன் இசைபண் அமைத்து நாதத்தில் பாடினேன் மனமொன்றி மந்திரம் நாளும் ஜெபித்தேன் கண்மூன்றில் புதைந்து உலகினை விடுத்தேன் யான் உனை காண வழியேதுமுண்டோ? ஏழைக்கு இரங்க உனக்குதான் மனமுண்டோ? எங்கு தேடினும் காணவில்லை - நீ யாதொன்று செய்தும் தோன்றவில்லை - நீ கண்ணீர் மல்கினேன் இரங்கவில்லை - நீ என்னை படைத்த இறைவாயார் - நீ இறைவா யார் நீ. ----------- jithu ...

முதல் காதல்

சூழ் கொண்ட மேகம், யாழ் மீட்டும் ஒருகானம், நீள் மட்டும் வானம், நாளும் காட்டும் புதுகோணம்! முன் கண்ட இவ்வுலகம், முன் போல் ஒருபோதுமிரா. பித்தம் ஏறி பிதற்றும், சித்தம் மாறி கிடற்றும். கால்அது தரையினில் நடப்பினும், மனமது வானிலே உலாவும் - விந்தையே! கனவுகளை எல்லாம் குத்தகை கொண்டு, நினைவுகளாய் வந்து ஒத்திகை பார்க்கும். நித்தம் நித்தம் தேய் பிறையாய், சித்தம் ஏங்கி உயிர் கறையும். ஊனினை மறந்து, உயிரினுள் புகுந்து, காற்றாகி கறைந்து, காதலாகி நின்றதோ - மாயம், காதலாகி நின்றதே - இக்காயம். கண் சொல்லும் ஒருசேதி, விழி உறிஞ்சும் உயிர்பாதி! முகம் கவிழ்ந்த மொட்டினுள், முன் பார்த்திராத தென்றலால், விரிந்த முதல் இதழ் - முதல் காதல் பின் குறிப்பு; பூஞ்சோலையில் ஒரு மொட்டு மட்டும் பூப்பதில்லை.😜 முதல் காதல் என்றும் புதிது. மீண்டும் மீண்டும் தோன்றினாலும் அது புதியதே! ஆணினால் பெண்ணுக்கோ! பெண்ணினால் ஆணுக்கோ மட்டும் உருவாவதல்ல! மசக்கை கொண்ட மகளிர் மாதமானால் எடுக்கும் முதல் வாந்தி - முதல் காதலே! பிண்டம் ஒன்று கருவிலே அண்டமான நாள் தொடக்கம் - முதல் காதலே! உயிருக்குள...

நட்பு

ஆயிரம் தொல்லை களிலே ஆயிரத்தி ஒன்றாவது தொல்லையே ஆயினும் பிரிய மனமில்லையே! கல கல வென பேசுவாய் குடு குடு வென ஓடுவாய் கிடு கிடு வென ஆடுவாய் சிடு சிடு வென சாடுவாய் எல்லை இல்லா தொல்லை நீ எதிலும் பிரிந்தது இல்லை நீ பசியில் இருந்தால் உணவளிக்கும் தாயும் நீ பசிதீரும் முன்னே முழுங்கிவிடும் பேயும் நீ நிம்மதி யில்லா திருந்தால் ஆறுதல் தருவாய் நிம்மதி யோடி ருந்தால் அமைதியை கெடுப்பாய் கண் களிக்கும் மங்கைகளை என் தங்கைகள் என்பாய் காண முடியா தவற்றை என் மணப்பெண் என்பாய் நண்மையே செய்வேன் என்பாய் ஒருபோதும் செய்ய மாட்டாய் உண்மையே பேசுவேன் என்பாய் ஒருபோதும் பேச மாட்டாய் கொஞ்சம் புகழ்ந்தாலும் என்ன காரியம் வேண்டும் என்பாய் கேவலமாக இகழ்ந்தாலும் பல்லை காட்டி பக்கம் வருவாய் இனிய பாடல் வரிகளை உன் இடி போல் குரலால் கொல்லுவாய் என் பேச்சை நீ கேட்டதில்லை உன் பேச்சை நான் கேட்டதில்லை ஆனாலோ பேச்சுகள் மட்டும் மணி கணக்கில் நீளும் காலை வணக்கம் பிறந்த நாள் வாழ்த்து அந்த நாள் இந்த நாள் இனிய நாள் - ஒருபோதும் வாழ்த்தியது இல்லை - ஒருபோதும் எதிர்பார்த்தது மில்லை கேலி கிண...

முதியோர்

முதிர்ந்த கனிகளை காம்புகள் உலர்த்திவிடும் முதிர்ந்த உயிர்களை உறவுகள் துரத்திவிடுமே! தேன் சொட்டும் கரும்பின் சுவைதீர்ந்தால் வீண் மட்டும் சக்கையாய் வீசிஎறிவாரே! அம்புலி காட்டி அமுதூட்டும் கரங்கள் அன்பிலா மாக்களிடம் வலியோடு ஏந்துவதோ! வாரம் மாதம் வருடமென தாங்கியவள் பாரம் ஒருநாள் வாழ்வதும் உன்னுடனே! பிஞ்சி விரல்கள் தீண்ட சிலிர்த்தவள் நஞ்சு வார்த்தைகளால் நாளும் துடித்தாளே! மழலை சொல்லால் மதிமயங்கி நின்றவள் நிழலை தீண்டவும் தகாதென சொல்கிறீர்களே! பெற்றதை எல்லாம் இழந்து விட்டபின் - நீ பெற்றதும் துணிந்ததே உனை இழந்துவிட! உடல் சதையெல்லாம் உருகி போக ஊண் எலும்பெலாம் குருகி போக கண் இரண்டும் ஒளி இழந்து செவி இரண்டும் மந்தம் அடைந்து நடையிழந்து, களையிழந்து, ஒளியிழந்து, ஓடென உழைத்தாய் அல்லும் பகலும் பரிசென கிடைத்ததோ முதியோர் இல்லம்! ஈன்றவர்கள் பசியோடு இங்கிருக்க ஈமச்சடங்குகள் எல்லாம் விளம்பரமே! உயிருடன் இருந்தால் வராத உறவெலாம் பிரிந்தபின் படைசூழ நிற்ப தென்னவோ! அனாதை பிணமாக எரியூட்டபட்ட சடலம் அன்னையை கைவிட்ட ஈனப்பிறவியின் சாபமே! முதுமை அடையா உயிர்கள...

ஏழைக் கவியின் ஏக்கம்!

தேனின் சுவையும் இனிக்கவில்லை என்வானில் ஒளியும் நிலைக்கவில்லை - எனக்காக அன்பு மட்டும்வாழ போதவில்லை அனைத்திலும் விலையுண்டு பேதமில்லை - எனக்காக கற்ற கல்வியில் பயனில்லை அதனாலான கடனோ தீரவில்லை - எனக்காக வறுமை நாளும் நீங்கவில்லை வாழ்கை இன்பம் கூட்டவில்லை - எனக்காக உணவுகள் சுவைத்து உண்டதில்லை உடைகள் மகிழ்ந்து உடுத்தவில்லை - எனக்காக இளமையின் தாகம் தீர்க்கவில்லை இழிந்த நிலையும் போகவில்லை - எனக்காக கொண்ட காதலும் ஜெயிக்கவில்லை செய்யும் வேலையும் பிடிக்கவில்லை - எனக்காக கனவுகள் எதுவும் நிறைவேறவில்லை கண்களின் ஓடையோ வற்றவில்லை - எனக்காக பூக்களில் வாசம் பூக்கவில்லை புண்பட்ட நேசமோ மறக்கவில்லை - எனக்காக ஓட்டத்தின் வேகம் குறையவில்லை ஓடியதால் பயனும் ஏதுமில்லை - எனக்காக வாழும் ஆசையோ நீங்கவில்லை அதன்வழி தான்ஏனோ தெரியவில்லை - எனக்காக நாள்கள் சரியாக போனதில்லை நேரமும் நன்றாக இருந்ததில்லை - எனக்காக இயற்கையின் பரிவோ கிடைக்கவுமில்லை ஈட்டிய செல்வமோ நிலைக்கவுமில்லை - எனக்காக பார்த்தவை எவையும் புரியவில்லை பழகியவை எவையும் சரியுமில்லை - எனக்காக தூங்கிய நாள்களோ அதிகமில்லை ஏங்கிய ந...