Skip to main content

சிவ பானம்



சிவ பானம் என்றால் கள்ளும், கஞ்சாவும், மதுவும் கருத்தில் கொள்வது தானே இன்றைய சூழ்நிலை
.
அவை மட்டும் போதை தரவில்லை இவ்வுலகில்
.
ஆணுக்கும் பெண் போதை
பெண்ணுக்கு ஆண் போதை
அன்பு ஒரு போதை
அறிவு ஒரு போதை
ஆற்றல் ஒரு போதை
ஆண்மை ஒரு போதை
ஆணவம் ஒரு போதை

உண்மை ஒரு போதை
உழைப்பு ஒரு போதை
உயர்வு ஒரு போதை

செல்வம் ஒரு போதை
செழிப்பு ஒரு போதை

பெண்மை ஒரு போதை
பேரும் பெயரும் ஒரு போதை

ஊன் ஒரு போதை
உடல் ஒரு போதை - அதில் உற்ற
இன்பம் ஒரு போதை

அவரவர் வயதுக்கேற்ப ஏதாவது ஒரு விஷயம் போதை தருகிறது
என்பது தான் உண்மை !!!

பாதை மாறிய அனைவரும்
போதைக்கு அடிமையானவர்களே!!

சிவ பானம் ரகசியமதை கூறுவோம்.
மதுவை குடித்தால் தான் போதை
மாதுவை பார்த்தால் தான் போதை - ஆனால்
ஈசனை நினைத்தாலே போதை தான்

கள்ளுண்ண வேண்டாம் தானே களிப்பு தரும்
ஞானம் தர வல்லது இந்த பானம்

தயாரிக்கும் முறைதனை கேள்…..
"உடல் எனும் அடுப்பில்
சுவாசம் எனும் துருத்தியால்
மூலாதாரத்தில் நெருப்பை மூட்டு"

"பார்வைதனை அண்ணாமலையில் இருத்தி,
வாசிதனை உண்ணாமுலையில் செலுத்த,
ஊசி முனையில் சிவபானம் கொட்டுதே!
காசி முனையில் சிவ தரிசனம் கிட்டுதே!"

-- ஜித்து

Comments

Popular posts from this blog

சிவ சொரூபம்:

சிவனுக்கு எக்கோயில்களிலும் உருவமில்லை காரணம் சாபம் என்பதில் ஞாயமில்லை உடலுக்கு உருவமுண்டு உயிருக்கு ஏதடா?? அண்டத்தில் எத்தனை உயிர்கள் - உண்டோ அத்தனையும் சிவ சொரூபமே சிறிதோ, பெரிதோ, ஒரு நாளோ, பல நூறு வருடமோ என எல்லாம் சிவ சொரூபமே. கோயில்களில் சிவனை சுயம்பு லிங்கமாக காண்பிப்பதற்கு அர்த்தம் உண்டு. அந்த சிவன் (ஜீவன்) தானாகவே தோன்றியதால் தான் சுயம்பு ஆகிறான். தானாக தோன்றியது எதுவோ, அது தானாகவே தான் அழியும். தோன்றியவனும்(பிறப்பு) அவனே அழித்தவனும்(இறப்பு) அவனே! ஈன்றெடுத்த தாயாகினும் உயிரை பெற்றாளே அன்றி படைக்கவில்லை. வளர்த்தெடுத்த தந்தையாகினும் உயிரை வளர்த்தாரே அன்றி வார்க்கவில்லை. தானகேவே தான் தோன்றியதை குறிக்கும் அடையாளமே சிவலிங்கம். சிவலிங்கம் என்றால். ஆண், பெண் குறி சேர்ப்பு என்றோ மூளையின் ஒரு பகுதியின் சுரப்பி என்றோ எண்ணுபவர்கள் கோடி இவ்வுலகில். தன் உயிரை தானே தரிசித்த ஒரு ஆன்மீக விஞ்ஞானி உருவாக்கிய குறியீடு தான் அது. ஊருக்கு செல்ல பயன்படும் வரைபடம் தான் அது. வரைபடம் ஒரு நாளும் ஊர் ஆகாது. அங்கு உறைந்திருக்கும் ஈசன் ஆகாது நட்ட கல்லும் பேச...

பயணம்

தொடங்கியது ஓர் நன்னாளில், பயணசீட்டு கொடுத்தான் சிறுபுன்னகையுடன், அதன் அர்த்தமென்னவென்றால்  என்று தொடங்கியதோ அன்றே முடியும் நாள் குறிக்கபட்டது. இந்த பயணத்தில் நீ, ரசிக்கலாம் சிரிக்கலாம் அழலாம் கோபபடலாம் ஏக்கம் கொள்ளலாம் அன்பு காட்டலாம் அறிவை வளர்க்கலாம் பிறருக்கு உதவலாம் அல்லது உபத்திரம் பண்ணலாம் இங்குள்ள எந்த பொருளையும் பயன்படுத்தலாம், அழிக்கலாம் ஆக்கலாம் காக்கலாம் சேர்க்கலாம் பிரிக்கலாம் பயணம் முடியும் முன்பே கீழே குதித்துவிடலாம் பயண காட்சிகளை கொண்டாடலாம் குதுகலிக்கலாம் இல்லை கண் மூடி கொள்ளலாம். என்று பயணம் எத்தனை துரமோ அதுவரை எது வேண்டுமானாலும் செய்யலாம் அல்லது எதுவும் செய்யாமல் இருக்கலாம். தற்காலிகமாக கொடுக்கபட்ட இருக்கைகளை தனது என்றும், பிறர் இருக்கைகளை தனதாக்க துடிக்கும் பல பேர். பயணத்திற்காக உருவாக்கி கொடுக்கபட்ட வசதிகள் அனைவருக்கும் சமமாக பங்கிடபடாமல் வலியோர் தங்கள் தேவையை பெருக்கி எளியோறை சுரண்டும் அவலம் இங்குண்டு. இருக்கை வளங்களையெல்லாம் அழித்து வண்டிகாரனை பழிக்கும் ஒரு கூட்டம். உயர்ந்தோர், தாழ்ந்தோர், கருப்பு, சிவப்பு, ஜாதி, மதம், ...