வாழ வைக்கும் அன்னையே - என்
வீடு தேடி ஓடிவா!
கால மெலாம் என்னையே - உன்
கண் மணியில் காத்துவா!
வீடு வாசல் செல்வமெலாம் - என்றும்
செழித்து வாழ வரங்கள்தா!
செல்வம் பதினாறும் அருளும் - என்
செல்வமே வராகி வா!
போக வாழ்வு இன்பம்தரும் - என்
பூங்கொடியே பிராமி வா!
கேட்ட தெலாம் அள்ளிதரும் - என்
கோமளமே வைஷ்ணவி வா!
செய்தொழில் யாவும் வெற்றிதரும் - என்
செந்தேனே இந்திரானி வா!
தவமும் தானமும் நித்தம்தழைக்க - என்
தங்கமே மாகேஷ்வரி வா!
வித்தைகள் யாவும் சித்திக்கும் - என்
வித்தகியே கௌமாரி வா!
ஆனந்த அமுது ஊட்டும் - என்
அம்மையே சாமுண்டி வா!
அன்னை உங்கள் திருவடியை - நாளும்
தொழுதால் நன்மை கோடியே!...
--
jithu

Comments
Post a Comment